என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    புஜாராவுக்கு பிறகு 3-வது வரிசையில் நிலையான வீரர் இல்லாமல் திணறும் இந்தியா
    X

    புஜாராவுக்கு பிறகு 3-வது வரிசையில் நிலையான வீரர் இல்லாமல் திணறும் இந்தியா

    • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஜூலை 9, 2024 நியமிக்கப்பட்டார்.
    • கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய டெஸ்ட் அணியின் 3-வது வரிசையில் நிலையான வீரரை விளையாட வைக்கவில்லை.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஜூலை 9, 2024 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார்.

    கம்பீரின் தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பல மோசமான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது. அவரது பயிற்சியாளர் பதவியில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (0-3) தோல்வியடைந்தது. இது இந்தியாவின் முதல் முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடர் தோல்வியாகும். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

    இந்நிலையில் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய டெஸ்ட் அணியின் 3-வது வரிசையில் நிலையான வீரரை விளையாட வைக்கவில்லை.

    அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 3-வது வரிசையில் பட்டிக்கல் களமிறங்கினார்.

    2-வது டெஸ்டில் சுப்மன் கில், 3-வது டெஸ்டில் கில் ஆடவில்லை. அதனை தொடர்ந்து கேஎல் ராகுல், மீண்டும் கில் 3-வது வரிசையில் இறங்கினார்.

    அதனை தொடர்ந்து இங்கிலாந்து எதிரான தொடரில் 3-வது வரிசையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய சுதர்சன் களமிறங்கினார். முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் 2-வது டெஸ்ட்டில் கருண் நாயர் அந்த வரிசையில் களமிறங்கினார்.

    இப்படி கடந்த 7 டெஸ்ட் போட்டியில் ஒரு நிலையான வீரரை 3-வது வரிசையில் களமிறக்கியதில்லை.

    அவரது முதல் ஆறு மாதங்களில், இந்திய அணி 26 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 14 வெற்றிகள், 10 தோல்விகள், ஒரு டிரா மற்றும் ஒரு டை பெற்றது.

    Next Story
    ×