என் மலர்
கிரிக்கெட் (Cricket)

INDvsSA: 2-வது ஒருநாள் போட்டியில் நடந்த சம்பவங்கள் ஒரு பார்வை
- அர்ஷ்தீப்சிங் ஒரு ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார்.
- பும்ரா, அர்ஷ்தீப்சிங் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிறைய தடுமாற்றத்தை சந்தித்தது.
ஆட்டத்தின் 11-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் வீசினார். பனியின் தாக்கத்தால் பந்து ஈரமானதால் அதை சரியாக பிடித்து வீச முடியாமல் சிரமப்பட்டார். அந்த ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார். இதையும் சேர்த்து அந்த ஓவரில் மொத்தம் 13 பந்துகள் வீசினார்.
இதனை பார்த்த இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டக் அவுட்டில் இருந்து கோபமாக கத்தினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் நாடுகளில் ஒரு ஓவரில் அதிக பந்துகள் போட்ட மோசமான பவுலர்களின் வரிசையில் பாகிஸ்தானின் நவீன் உல்-ஹக்கை (கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரே ஓவரில் 13 பந்து வீசினார்) சமன் செய்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, அர்ஷ்தீப்சிங் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இருவரும் இணைந்து மொத்தம் 99 ரன்களை விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் தடுமாற்றம் தொடருகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசி 20 இன்னிங்சில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் 13-வது தோல்வி இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக இந்தியா சந்தித்த அதிக தோல்வி இதுதான்.






