என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசை: சஞ்சு சாம்சன் அசுர முன்னேற்றம் #ICC Rankings
    X

    ஐசிசி டி20 பேட்டர்கள் தரவரிசை: சஞ்சு சாம்சன் அசுர முன்னேற்றம் #ICC Rankings

    • முதல் 10 இடத்திற்குள் 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • அபிஷேக் சர்மா முதல் இடத்தில் நீடிக்கிறார்.

    டி20 கிரிக்கெட்டின் தரவரிசையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அதில் பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவைச் சேர்ந்த 4 வீரர்கள் முதல் 10 இடத்திற்குள் இடம் பிடித்துள்ளனர்.

    அபிஷேக் சர்மா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். அவர் தரவரிசைக்கான 874 புள்ளிகளை பெற்றுள்ளார். பாகிஸ்தானின் சஹிப்சதா பர்ஹான் 848 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பில் சால்ட் 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    இஷான் கிஷன் 5-வது இடத்தில் இருந்து 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பதுன் நிசாங்கா 4-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    திலக் வர்மா 7-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு முன்னேறிய நிலையில், சூர்யகுமார் யாதவ் 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    தென்ஆப்பிரிக்காவின் டெவால்டு பிரேவிஸ் 9-வது இடத்தில் இருந்து 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பட்லர் 8-வது இடத்தில் இருந்து 9-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    செய்பெர்ட் 10-வது இடத்தில் நீடிக்கிறார். சஞ்சு சாம்சன் 25 இடங்கள் முன்னேறி 40-வது இடத்தில் உள்ளார்.

    Next Story
    ×