என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    லிட்ச்பீல்ட் போராட்டம் வீண்- 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி
    X

    லிட்ச்பீல்ட் போராட்டம் வீண்- 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி

    • தனி ஆளாக போராடிய லிட்ச் பீல்ட் 78 ரன்னில் அவுட் ஆனார்.
    • உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று தொடங்கியது. இதில் இன்று நடைபெறும் 2-வது லீக் ஆட்டத்தில் ஆஷ்லி கார்ட்னெர் தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ்-மெக் லானிங் தலைமையிலான உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின.

    இதில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

    சோபி டிவைன், அனுஷ்கா சர்மா, கேப்டன் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 207 ரன்கள் எடுத்தது.

    கடினமான இலக்கை நோக்கி உபி வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக டியான்ட்ரா டோட்டின், மெக் லேனிங் இதில் டோட்டின் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து லேனிங் மற்றும் போப் லிட்ச்பீல்ட் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

    குறிப்பாக போப் லிட்ச்பீல்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்தார். நிதானமாக விளையாடிய லேனிங் 27 பந்தில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்த வந்த வீராங்கனைகளான தியோல் (0), தீப்தி ஷர்மா (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தனி ஆளாக போராடிய லிட்ச் பீல்ட் 78 ரன்னில் அவுட் ஆனார்.

    இறுதியில் உபி வாரியர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 197 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    Next Story
    ×