என் மலர்
கிரிக்கெட் (Cricket)

216 இலக்கு: கோல்டன் டக் ஆன அபிஷேக் சர்மா..!
- நியூசிலாந்து அணி 215 ரன்கள் குவித்துள்ளது.
- சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது.
இதனால் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா முதல் பந்தை எதிர்கொண்டார். மாட் ஹென்றி முதல் ஓவரை வீசினார். முதல் பந்தை அபிஷேக் சர்மா இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்தார். பந்தை பேட்டில் எட்ஜ் ஆகி Third Man திசையில் மேல்நோக்கி பறந்தது. அங்கு நின்றிருந்த கான்வே அபாரமாக கேட்ச் பிடித்தார். இதனால் அபிஷேக் சர்மா கோல்டன் டக் உடன் ஏமாற்றம் அடைந்தார்.
அடுத்து சூர்யகுமாயர் யாதவ் களம் இறங்கினார். அவர் 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
Next Story






