என் மலர்
கிரிக்கெட் (Cricket)

148 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அரங்கேறிய சம்பவம்
- முதலில் விளையாடிய கனடா அணி 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இதனையடுத்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2027-ம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இரண்டாவது தகுதி சுற்று போட்டிகளில் ஸ்காட்லாந்து மற்றும் கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெறாத ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுமட்டும் இன்றி இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்த தகவல்கள் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாறியுள்ளன.
அந்த வகையில் கனடா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கனடா அணி 184 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 41.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக கனடா அணி முதலில் பேட்டிங் செய்கையில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளனர்.
இந்த போட்டியின் முதல் பந்தில் கனடா அணியை சேர்ந்த தொடக்க வீரர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு இரண்டாவது பந்தின் போது எதிர்புறம் இருந்த புதிய பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட் மூலம் 2-வது தொடவக்க வீரரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு தொடக்க வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. இப்படி ஒரு அரிதான மோசமான சாதனையை ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக கனடா அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.






