என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ENGvsIND 4th test ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு: சங்கக்கரா சாதனையை சமன் செய்த ஜோ ரூட்..!
    X

    ENGvsIND 4th test ரிக்கி பாண்டிங் சாதனை முறியடிப்பு: சங்கக்கரா சாதனையை சமன் செய்த ஜோ ரூட்..!

    • 38 சதங்கள் அடித்து சங்கக்கரா சாதனையை சமன் செய்துள்ளார்.
    • டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியா- இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது, பென் ஸ்டோக்ஸ் (5 வி்க்கெட்) அபாரமாக பந்து வீச இந்தியா 358 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜெய்ஸ்வால் (58), சாய் சுதர்சன் (61), ரிஷப் பண்ட் (54) ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

    பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கிராவ்லி (84), பென் டக்கட் (94), ஆலி போப் (71) அரைசதங்கள் அடித்தனர். அடுத்து வந்த ஜோ ரூட் சதம் விளாசினார்.

    இந்த தொடரில் ஜோ ரூட்டின் 2ஆவது சதம் இதுவாகும். மேலும் இந்தியாவுக்கு எதிராக இது அவருடைய 12ஆவது சதம் ஆகும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 38 சதங்கள் அடித்துள்ளார்.

    இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியில் சங்கக்கரா உடன் 3ஆவது இடத்தை பகிர்ந்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 51 சதங்கள் அடித்துள்ளார். கல்லீஸ் 45 சதங்கள் அடித்துள்ளனர்.

    மேலும், 120 ரன்கள் எடுத்திருக்கும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2ஆவது இடம் பிடித்திருந்த ரிக்கி பாண்டிங் (13,378) சாதனையை முறியடித்துள்ளார். சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

    Next Story
    ×