என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய அணியில் குல்தீப் முக்கிய பங்கு வகிப்பார்- டிவில்லியர்ஸ்
- துபாயில் உள்ள மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
- அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் பிப்ரவரி 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், 'பி' பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. இந்திய அணியின் ஆட்டங்கள் துபாயில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் முக்கிய பங்கு வகிப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இந்திய அணியில் குல்தீப் யாதவ் இருக்கிறார். அவர் இந்திய அணியின் ஒரு முக்கிய வீரராக இருப்பார். இந்திய அணி, துபாயில் உள்ள மைதானங்களில் மட்டும்தான் விளையாட இருக்கிறது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். எனவே இதில் குல்தீப் யாதவ் சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன். அவர் ஆடுகளத்தின் சூழ்நிலை புரிந்துகொண்டு நிச்சயம் இந்தியாவுக்கு முக்கிய பங்காற்றுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமீப காலமாக காயத்தால் இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்து வந்த குல்தீப் யாதவ், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






