என் மலர்
கிரிக்கெட் (Cricket)

SENA நாடுகளில் 150 டெஸ்ட் விக்கெட்டுகள்... முதல் ஆசிய பந்துவீச்சாளராக வரலாறு படைத்தார் பும்ரா
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது
- இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இப்போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் SENA நாடுகள் எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆடுகளங்களில் 150 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் ஆசிய வேகப்பந்துவீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை பும்ரா படைத்தார்
இதற்கு முன்பு 146 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் இருந்த பாகிஸ்தானின் வாசிம் அக்ரமை பும்ரா பின்னுக்கு தள்ளி அசத்தியுள்ளார்.






