என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஓய்வா, வாய்ப்பே இல்லை: இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது என்கிறார் புவனேஷ்வர் குமார்
    X

    ஓய்வா, வாய்ப்பே இல்லை: இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது என்கிறார் புவனேஷ்வர் குமார்

    • நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன்.
    • எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன்.

    இந்திய அணியின் மித வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் அபார திறமை கொண்டவர். இந்திய அணிக்காக மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் தொடர்ந்து இடம் பிடித்து விளையாடி வந்தார்.

    2012ஆம் ஆண்டில் அறிமுகமான அவர், 2018ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் இடம் பெறவில்லை. 2022ஆம் ஆண்டுக்கப் பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிக்கான அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில், இந்திய அணியில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்திய அணிக்கு திரும்புவது தேர்வாளர்கள் கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக புவனேஷ்வர் குமார் கூறுகையில் "நான் என்னுடைய பந்து வீசுவதை ரசித்து கொண்டிருக்கிறேன். தற்போது வரை ஓய்வு குறித்து நினைத்ததில்லை. எவ்வளவு காலம் உடற்தகுதியுடன் இருக்கிறேனோ, அவ்வளவு காலம் விளையாட முயற்சிப்பேன். மற்றவை தேர்வாளர்கள் கையில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    35 வயதாகும் புவனேஷ்வர் குமார் 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 68 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 121 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 87 டி20 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    Next Story
    ×