search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியுடன் வருவேன் - பென் ஸ்டோக்ஸ்
    X

    பாகிஸ்தான் தொடருக்கு முன் முழு உடற்தகுதியுடன் வருவேன் - பென் ஸ்டோக்ஸ்

    • எனது காயத்திலிருந்து நான் தற்போது 50% குணமடைந்துவிட்டேன்.
    • ஆனாலும் இது இன்னும் எனக்கு பிரச்சனையாகவே இருந்து வருகிறது.

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் இலங்கை அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி இரண்டிலும் வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது.

    இந்நிலையில் இத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இத்தொடரில் இருந்து விலகினார். இதன் காரணமாக இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஒல்லி போப் இத்தொடரில் செயல்படுவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    இந்நிலையில் எதிர்வரும் பாகிஸ்தான் தொடருக்கு முன்னதாக முழு உடற்தகுதியை எட்டிவிடுவேன் என்று பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    எனது காயத்திலிருந்து நான் தற்போது 50% குணமடைந்துவிட்டேன். ஆனாலும் இது இன்னும் எனக்கு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. அதனால் மோசமான ஏதாவது ஒன்றைச் செய்து, நீண்ட காலத்திற்கு என்னை விளையாட்டிலிருந்து வெளியேற்றும் அபாயத்தை விட, இரண்டு வாரங்கள் கூடுதலாக எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

    நான் எல்லாவற்றையும் சரியாகச் செய்கிறேனென்றும், பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டு போட்டிக்குள் தகுதியடைவதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறேன்.

    இவ்வாறு ஸ்டோக்ஸ் கூறினார்.

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது அக்டோபர் 7-ம் தேதி தொடங்கவுள்ளது.

    Next Story
    ×