என் மலர்
கிரிக்கெட் (Cricket)

சிட்னி ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் ரோகித் சர்மா
- 63 பந்தில் அரைசதம் அடித்து, 105 பந்தில் சதம் அடித்தார்.
- இது அவரின் 33ஆவது ஒருநாள் சர்வதேச சதமாகும்.
ஆஸ்திரேலியா- இந்தியா இடையிலான 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 236 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பின்னர் 237 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.
சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.
அவர் 63 பந்தில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இது அவருடைய 60ஆவது அரைசதம் ஆகும். மறுமுனையில் டக்அவுட்டை தாண்டிய விராட் கோலி, 56 பந்தில் 4 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.
இந்த ஜோடி 100 ரன்களை கடந்தது. இதன்மூலம் ரோகித் சர்மா- விராட் கோலி ஜோடி கடந்த 5 ஆண்டுகளில் முதன்முறையாக 100 பார்ட்னர்ஷிப்பை கடந்தது.
தொடர்ந்து விளையாடிய ரோகித் சர்மா 105 பந்தில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் விளாசினார். 2ஆவது போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். இது அவரின் 33ஆவது ஒருநாள் சதமாகும்.






