யு19 உலகக் கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியை 12 ஓவர்களில் முடித்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வில் பைரோம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
யு19 உலகக் கோப்பை: இலங்கைக்கு எதிரான போட்டியை 12 ஓவர்களில் முடித்த ஆஸ்திரேலியா
Published on

16 அணிகள் பங்கேற்கும் 19 வயதுக்குட்பட்டவருக்கான (யு19) ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இலங்கை - ஆஸ்திரேலிய அணிகள் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி வீரர்கள், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 18.5 ஓவர்களில் இலங்கை அணி 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசி வில் பைரோம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 59 ரன்கள் இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடியது.

தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி 12 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது. இதனால் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் ஏற்கனவே சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com