2023 உலகக் கோப்பை சாம்பியனுக்குப் பிறகு ஐசிசி தொடர்களில் சறுக்கிய ஆஸ்திரேலியா..!

2024 டி20 உலகக் கோப்பையில் குரூப் 8 சுற்றோடு வெளியேறியது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.
2023 உலகக் கோப்பை சாம்பியனுக்குப் பிறகு ஐசிசி தொடர்களில் சறுக்கிய ஆஸ்திரேலியா..!
Published on

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இன்று நடைபெற இருந்த ஜிம்பாப்வே- அயர்லாந்து இடையிலான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் ஜிம்பாப்வே அணிக்கு ஒரு புள்ளிகள் கிடைத்து 5 புள்ளிகளுடன் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 2-வது முறையாக ஆஸ்திரேலியா குரூப் சுற்றோடு வெளியேறியுள்ளது. இதற்கு முன்னதாக 2009-ம் ஆண்டு குரூப் சுற்றோடு வெளியேறியது.

மேலும், 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை வென்றபின், ஐசிசி நடத்திய 4 தொடர்களில் விளையாடி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் சறுக்கலை சந்தித்து வருகிறது.

2024 டி20 உலகக் கோப்பை, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, தற்போது டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் ஏமாற்றத்தை சந்தித்துள்ளது.

2024 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறியது. 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் அரையிறுதியோடு வெளியேறியது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com