என் மலர்
கிரிக்கெட் (Cricket)

5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்டோக்ஸ்: முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 17 ரன்னில் ஆட்டமிழந்தார்.
- பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடங்கத்தில் இருந்தே திணறியது. இதனால் அந்த அணி சீரான இடைவேளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
அந்த அணியில் 4 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை கடந்தனர். பென் டக்கெட் 21, ஒலி போப் 46, ஹார் ப்ரூக் 52, ஸ்மித் 33 ஆகியோர் ரன் குவிப்பில் இங்கிலாந்து அணி 172 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. முதல் ஓவரின் 2-வது பந்தில் ஆர்ச்சர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
இதனையடுத்து லெபுசென் -ஸ்மித் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 14 ஓவர்கள் தாக்குபிடித்த இந்த ஜோடியை ஆர்ச்சர் பிரித்தார். லெபுசெனை (9) கிளின் போல்ட் ஆக்கினார். அடுத்த ஓவரில் ஸ்மித் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த கவாஜா (2) வந்த வேகத்தில் வெளியேறினார்.
இந்த நிலையில் ஹெட் மற்றும் கிரீன் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய நிலையில் பென் ஸ்டோக்ஸ் இந்த ஜோடியை பிரித்தார்.
ஹெட் 21 ரன்னிலும் கிரீன் 24 ரன்னிலும் இவரது பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து அலெக்ஸ் ஹேரி 26 ரன்னிலும் ஸ்டார்க் 12 ரன்னிலும் போலண்ட் 0 ரன்னிலும் வெளியேறினர்.
123 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.






