என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பை: இந்தியா, பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேசம் அணி அறிவிப்பு
    X

    ஆசிய கோப்பை: இந்தியா, பாகிஸ்தானை தொடர்ந்து வங்கதேசம் அணி அறிவிப்பு

    • லிட்டன் தாஸ் தலைமையிலான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 09-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 09-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ளன. அதேசமயம், குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதனையடுத்து இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    மேலும் இத்தொடர்களுக்கான அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அந்தவகையில் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணியும், சல்மான் அலி ஆகா தலைமையில் பாகிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆப்கானிஸ்தான், இலங்கை, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், நேபாள் உள்ளிட்ட அணிகள் இதுவரை அறிவிக்கப்படாமல் உள்ளது.

    இந்நிலையில் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான வங்கதேச அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. லிட்டன் தாஸ் தலைமையிலான இந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்டர் குவாஸி நூருல் ஹசன் சோஹன் மீண்டும் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி:

    லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் எமன், சைஃப் ஹாசன், தவ்ஹித் ஹ்ரிடோய், ஜேக்கர் அலி அனிக், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன் சோஹன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், ஷைஃப் உதீன்

    Next Story
    ×