என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சச்சினைப் போலவே பேட்டிங் செய்கிறார்- அர்ஜூன் டெண்டுல்கரை புகழ்ந்த யுவராஜ் தந்தை
    X

    சச்சினைப் போலவே பேட்டிங் செய்கிறார்- அர்ஜூன் டெண்டுல்கரை புகழ்ந்த யுவராஜ் தந்தை

    • கடந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கரை வாங்கியது.
    • அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என யோகராஜ் கூறியுள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர். இவர் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் ஆலோசகராக உள்ளார். இவரது மகனாக அர்ஜூன் டெண்டுல்கர் இடதுகை வேகப்பந்து வீச்சாளராக உள்ளார்.

    ஐபிஎல் தொடரில் கடந்த 2 ஆண்டுகளாக இருந்தார். அவருக்கு பெரும்பாலான போட்டிகளில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு ஏலத்திற்கு முன்பாக லக்னோ அணி ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜூன் டெண்டுல்கரை வாங்கியது.

    அவர் தற்போது ஐபிஎல் தொடருக்காக பந்து வீச்சு மட்டும் பேட்டிங்கில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இந்த நிலையில் இவரது பேட்டிங்கை பார்த்த இந்திய அணியின் முன்னாள் வீரரும் யுவராஜ் சிங் தந்தையுமான யோகராஜ் பாராட்டி உள்ளார்.

    அதில், "அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும், அவர் ஒரு தரமான பேட்ஸ்மேன், அவர் சச்சினைப் போலவே பேட்டிங் செய்கிறார்" என்றார்.

    Next Story
    ×