என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தொடர்ந்து 2-வது முறையாக சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்
    X

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: தொடர்ந்து 2-வது முறையாக சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்

    • இறுதிப்போட்டியில் ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) உடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதினர்.
    • கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார்.

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடைபெற்று வந்தது.

    இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில், ஜன்னிக் சின்னெர் (இத்தாலி) உடன் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) மோதினர்.

    இந்த ஆட்டத்தில் சின்னெர் 6-3, 7-6 (4), 6-3 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

    கடந்தாண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் உலகின் நம்பர் ஒன் வீரரான சின்னெர் சாம்பியன் பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×