search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அரை சதமடித்த ரஜத் படிதார்
    X
    அரை சதமடித்த ரஜத் படிதார்

    ரஜத் படிதார் அரை சதம் - ராஜஸ்தான் வெற்றி பெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பெங்களூரு

    பெங்களூரு அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 19வது ஓவரை வீசிய ராஜஸ்தானின் பிரசித் கிருஷ்ணா தினேஷ் கார்த்திக், ஹசரங்கா ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
    அகமதாபாத்:

    15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.

    தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். கேப்டன் டூ பிளசிஸ் 25 ரன்னும், மேக்ஸ்வெல் 24 ரன்னிலும், லாம்ரோர் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.  

    ஒருபுறம் விக்கெட் விக்கெட் வீழ்ந்தாலும் கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 7 ரன்னில் அவுட்டானார்.

    ராஜஸ்தான் சார்பில் மெக்காய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
    Next Story
    ×