search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விர்த்திமான் சஹா
    X
    விர்த்திமான் சஹா

    எந்த மைதானத்திலும் சிறப்பாக ஆடுவோம்- குஜராத் வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை

    எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
    கொல்கத்தா:

    24-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் “பிளேஆப்” சுற்று ஆட்டம் இன்று தொடங்குகிறது.

    கடந்த மார்ச் மாதம் 26-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் நேற்று முன்தினத்தோடு ‘லீக்’ ஆட்டங்கள் முடிவடைந்தன. 10 அணிகள் பங்கேற்ற இந்த ஐ.பி.எல்.லில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

    டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 10 இடங்களை பிடித்து வெளியேறின.

    பிளேஆப் சுற்றின் ‘குவாலிலையர் 1’ ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தல் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ்-சஞ்சு சாஞ்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறுவது குஜராத்தா? ராஜஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. தோற்கும் அணி ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் விளையாடும்.

    லக்னோ-பெங்களூர் இடையே நாளை நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தல் வெற்றி பெறும் அணி குவாலிபையர்-2 போட்டியில் விளையாடும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

    இறுதிப் போட்டியில் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய குவாலிபையர் 1 ஆட்டம் பரபரப்பாகவும், விறு விறுப்பாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

    ஐ.பி.எல். போட்டியில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மும்பை மற்றும் புனேயில் நடந்தது. பிளே ஆப் சுற்றில் குவாலிபையர் 1, எலிமினினேட்டர் ஆட்டங்கள் கொல்கத்தாவிலும், குவாலிபையர் 2, இறுதிப்போட்டி அகமதாபாத்திலும் நடக்கிறது.

    இந்த நிலையில் எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் விர்த்திமான் சஹா நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    குஜராத் அணிக்காக நான் விளையாடுகிறேன். எனவே எனது சொந்த மைதானம் அகமதாபாத் மொதேரா ஸ்டேடியம் ஆகும்.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக நான் நீண்ட காலம் ஆடவில்லை. இதனால் ஈடன் கார்ன் எனது சொந்த மைதானம் அல்ல. எந்த மைதானத்திலும் குஜராத் அணி சிறப்பாக விளையாடும்.

    இந்திய அணிக்கான தேர்வு குறித்து நான் நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துவதாகும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன்களை குவிக்க வேண்டும். முதல் 6 ஓரில் அதிரடியாக ஆடுவதுதான் முக்கியமானது.

    இவ்வாறு விர்த்திமான் சஹா கூறியுள்ளார்.

    சஹா இந்த ஐ.பி.எல். சீசனில் 9 ஆட்டத்தில் 3 அரை சதத்துடன் 312 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×