என் மலர்
விளையாட்டு

ஜஸ்பிரீத் பும்ரா
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை - பந்துவீச்சில் 4வது இடத்துக்கு முன்னேறினார் பும்ரா
ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் பல ஆண்டுகளாக முதல் 5 இடங்களுக்குள் இருந்த விராட் கோலி தற்போது 9வது இடத்தில் உள்ளார்.
துபாய்:
டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், ஆல் ரவுண்டர்களின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.
பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுசேன் முதல் இடம் பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் கேப்டன் ரோகித் சர்மா 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி 9-வது இடத்திலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 10-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சாளர்களுக்கான பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 2-வது இடத்தில் நீடிக்கிறார். 3-வது இடத்தில் தென்னாபிரிக்காவின் ரபாடா உள்ளார். இந்திய அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் முதல் இடமும், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும் அஸ்வின் 3-வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் படியுங்கள்...ஒருநாள் போட்டியில் 250 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை: ஜுலான் கோஸ்வாமி சாதனை
Next Story






