என் மலர்

  விளையாட்டு

  விராட் கோலி
  X
  விராட் கோலி

  டெஸ்ட் கிரிக்கெட்தான் உண்மையான கிரிக்கெட் - விராட் கோலி பெருமிதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
  மொகாலி:

  இந்தியா-இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் என்பது கூடுதல் சிறப்பாகும்.

  இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

  100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. எனக்கு இது மிக நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். நான் எனது உடற்தகுதிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.

  எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு பெரிய தருணம். என்னைப் பொறுத்த வரையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். எனது பயிற்சியாளரும் இது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

  நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எப்போதும் இருந்தது. நான் ஜூனியர் கிரிக்கெட்டில் பெரிய இரட்டை சதங்களை அடித்துள்ளேன்.

  எனவே, நீண்ட  நேரம் பேட்டிங் செய்து வெற்றி பெற வேண்டும் அல்லது முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. இதை தான் நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன். என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட் என தெரிவித்துள்ளார்.

  Next Story
  ×