என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அதிரடியாக ஆடிய பதும் நிசங்கா, கேப்டன் சனகா
    X
    அதிரடியாக ஆடிய பதும் நிசங்கா, கேப்டன் சனகா

    கேப்டன் சனகா அதிரடி... இந்தியாவுக்கு 184 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை

    பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட இலங்கை அணி கேப்டன் தசுன் சனகா 19 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார்.
    தரம்சாலா:

    இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி20 போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்கள் பதும் நிசங்கா, தனுசா குணதிலக இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.  குணதிலக 38 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அசலங்கா (2), கமில் மிஷாகா (1), சண்டிமல் (9) என சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். எனினும், மறுமுனையில் தொடர்ந்து அதிரடி காட்டிய நிசங்கா 75 ரன்கள் குவித்தார். 

    கடைசி நேரத்தில் பந்துகளை சிக்சர்களாக பறக்க விட்ட கேப்டன் தசுன் சனகா 19 பந்துகளில் 47 ரன்கள் (நாட் அவுட்) விளாச,  இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. 

    இதையடுத்து 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கியது. 
    Next Story
    ×