search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விக்கெட் வீழ்த்திய அஷ்வினை பாராட்டும் வீரர்கள்
    X
    விக்கெட் வீழ்த்திய அஷ்வினை பாராட்டும் வீரர்கள்

    வான்கடே டெஸ்ட் கிரிக்கெட்- 62 ரன்களுக்குள் நியூஸிலாந்தை சுருட்டியது இந்தியா

    இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்தார்.
    மும்பை

    இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் வான்கடே மைதானத்தில் நேற்று தொடங்கியது.  முதல்நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்திருந்தது. மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், சகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இரண்டாவது நாளான இன்று காலை ஆட்டம் தொடர்ந்த நிலையில் மேலும் 2 ரன்கள் சேர்த்த சகா ஆட்டமிழந்தார். அடுத்து களம் இறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் ரன் எதுவும் எடுக்காமல் அஜாஸ் படேல் பந்துவீச்சிற்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.  பின்னர் வந்த அக்ஸர் படேல் மயங்க் அகர்வால் உடன் ஜோடி சேர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். 

    அரைசதம் அடித்த அக்ஸர், 52 ரன்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். எனினும்  தொடர்ந்து விளையாடிய மயங்க் அகர்வால் 150 ரன்களை குவித்த நிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களுடன் வெளியேற இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 325 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. 

    10 விக்கெட் கைப்பற்றிய அஜாஸ் பட்டேலுக்கு வாழ்த்து தெரிவிக்கும் சக வீரர்கள்

    இந்தப் போட்டியில் மும்பையை பூர்வீகமாக கொண்ட நியூசிலாந்து வீரர் அஜாஸ் பட்டேல் 47.5 ஓவர்கள் வீசி இந்திய அணியின் 10 விக்கெட்களையும் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.  

    இதையடுத்து முதல் இன்னிங்ஸை விளையாடிய நியூஸிலாந்து வீரர்கள் ஆரம்பம் முதலே இந்திய வீரர்களின் சுழல் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். 28.1 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூஸிலாந்து அணி 62 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக  ஜேமிசன் 17 ரன்களும், லாதம் 10 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்னுடன் வெளியேறினர். 

    இந்தியா தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்களை வீழ்த்தினார். சிராஜ் 3 விக்கெட்டுகளும், அக்ஸர் படேல் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஜெயந்த் யாதவ் ஒரு விக்கெட் எடுத்தார். 

    இதையடுத்து நியூஸிலாந்து பாலோ ஆன் ஆனது. ஆனாலும், பாலோ ஆன் கொடுக்காத இந்திய அணி 263 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. 
    Next Story
    ×