search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் சங்கர்
    X
    விஜய் சங்கர்

    சையத் முஷ்டாக் அலி டிராபி - அரையிறுதியில் தமிழகம்-ஐதராபாத், கர்நாடகம்-விதர்பா மோதல்

    சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழ்நாடு அணிக்கு எதிரான போட்டியில் கேரளாவின் விஷ்ணு வினோத் அரை சதமடித்து 65 ரன்கள் எடுத்து அசத்தினார்.
    புதுடெல்லி:

    சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான காலிறுதிச் சுற்றுக்கு தமிழ்நாடு, ராஜஸ்தான், பெங்கால், குஜராத், ஐதராபாத், கேரளா, விதர்பா, கர்நாடகம் ஆகிய அணிகள்  தகுதிபெற்றன.

    இந்நிலையில், நேற்று நடைபெற்ற காலிறுதியில் தமிழ்நாடு, கேரளா அணிகள் மோதின. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய கேரள அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர் ரோஹன் 51 ரன்கள் எடுத்தார். விஷ்ணு வினோத் 26 பந்துகளில் 7 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் குவித்தார்.

    தமிழக அணி சார்பில் சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்சன் 46 ரன், விஜய் சங்கர் 33 ரன், ஹரி நிஷாந்த், சஞ்சய் யாதவ் தலா 32 ரன்கள் எடுத்தனர். இறுதியில் ஷாருக் கான் 19 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதன்மூலம் தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது. 

    இதேபோல், குஜராத், ஐதராபாத்துக்கு இடையே நடந்த காலிறுதியில் ஐதராபாத் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாளை நடைபெறும் அரையிறுதியில் ஐதராபாத் அணி தமிழ்நாடு அணியுடன் மோதுகிறது.

    ராஜஸ்தான், விதர்பா அணிகளுக்கு இடையே நடந்த காலிறுதியில் விதர்பா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கர்நாடகம், பெங்கால் அணிகளுக்கு இடையே நடந்த காலிறுதிப் போட்டி சமனில் முடிந்தது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில் கர்நாடகா அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் நாளை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் கர்நாடகா அணி விதர்பா அணியை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×