search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பந்தை சிக்சருக்கு விளாசும் வில்லியம்சன்
    X
    பந்தை சிக்சருக்கு விளாசும் வில்லியம்சன்

    டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி- ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசி.

    அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்தார்.
    துபாய்:

    ஏழாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் துபாயில் இன்று நடைபெறுகிறது. இதில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    துவக்க வீரர்களான டேரில் மிட்செல் 11 ரன்னிலும், மார்ட்டின் குப்தில் 28 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். 32 பந்துகளில் அரை சதம் கடந்த அவர், தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். மறுமுனையில் பிலிப்ஸ் நிதானமாக ஆடினார்.

    மார்ட்டின் குப்திலை அவுட் ஆக்கிய ஆடம் ஜம்பா

    அணியின் ஸ்கோர் 144 ஆக இருந்தபோது, பிலிப்ஸ் 18 ரன்களில் அவுட் ஆனார். வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் குவித்த நிலையில், ஹாசில்வுட் ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

    ஜேம்ஸ் நீஷம் 13 ரன்கள் , டிம் செய்பர்ட் 8 ரன்கள் அடிக்க, நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது.  ஆஸ்திரேலியா தரப்பில் ஹாசில்வுட் 3 விக்கெட் வீழ்த்தினார். 

    இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.
    Next Story
    ×