என் மலர்

  செய்திகள்

  இந்திய அணி
  X
  இந்திய அணி

  டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது இந்தியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அக்டோபர் 24ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
  புதுடெல்லி:

  அடுத்தடுத்த தொடர்களால் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பிசியாக உள்ளனர். இந்திய அணி வீரர்கள் தற்போது ஐபிஎல் போட்டிகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் முகாமிட்டுள்ளனர்.  14-வது ஐ.பி.எல். சீசனின் இரண்டாவது கட்ட ஆட்டங்கள் நாளை (செப் 19-ந்தேதி) தொடங்கி அக்டோபர் 15-ந் தேதி வரை நடக்கிறது. 

  இந்த தொடர் முடிந்த கையோடு இந்திய அணி டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.  இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 17ம் தேதி தொடங்க உள்ளது. இந்திய அணி அக்டோபர் 24ஆம் தேதியன்று பாகிஸ்தான் அணியுடன் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடவுள்ளது. இப்போட்டிக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. 

  இந்த போட்டியில் விளையாடுவதற்கு முன்னதாக, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. வீரர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியாக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

  அக்டோபர் 18ஆம் தேதி இங்கிலாந்துடனும், அக்டோபர் 20ஆம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.  
  Next Story
  ×