search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்குலி
    X
    கங்குலி

    கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் குறித்து 22-ந் தேதி முடிவு - கங்குலி தகவல்

    இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் ரத்தானதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

    மான்செஸ்டர்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    முதலில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ‘பயிற்சி முகாமுக்குள் கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் வருந்தத்தக்க வகையில் இந்தியா அணியை களம் இறக்க முடியவில்லை. இதனால் இந்தியா போட்டியை இழந்தது, என்று குறிப்பிட்டு இருந்தது.

    பின்னர் உடனடியாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் புதிய அறிக்கையை வெளியிட்டது. அதில் 5-வது மற்றும் கடைசி டெஸ்டை இந்தியா இழந்தது என்ற குறிப்பு மாற்றப்பட்டு போட்டி கைவிடப்பட்டதாக தெரிவித்தது.

    இதனால் இந்த டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதா, ஒத்தி வைக்கப்பட்டுள்ளதா அல்லது இந்தியா இந்த டெஸ்டை இழந்ததா என்ற சர்ச்சை எழுந்தது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    அதன்படி இந்த டெஸ்ட் தொடர் இன்னும் முடியவில்லை. இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது என்றும், கடைசி டெஸ்ட் மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட 5-வது டெஸ்ட் போட்டியை எப்போது நடத்துவது என்பது குறித்து வருகிற 22 அல்லது 23-ந் தேதி முடிவு செய்யப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகியுடன் இது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். கடைசி டெஸ்ட் ரத்தானதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அந்த போட்டி வேறொரு நாளில் நடத்தப்படுகிறது.

    Next Story
    ×