search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியம்சன்
    X
    வில்லியம்சன்

    ஐபிஎல் போட்டி தொடரை தள்ளி வைத்தது சரியான முடிவு - வில்லியம்சன்

    ஐ.பி.எல். போட்டி தொடரில் மீதமுள்ள ஆட்டங்களை மீண்டும் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை தவிர்த்து வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சவுத்தம்டன்:

    கடந்த மாதம் இந்தியாவில் தொடங்கிய 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரின்போது சில வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து ஐ.பி.எல். போட்டி தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக கடந்த 4-ந்தேதி இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

    ஐ.பி.எல். போட்டி தொடரில் மீதமுள்ள ஆட்டங்களை மீண்டும் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை தவிர்த்து வெளிநாட்டில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டி தொடரை ஒத்திவைத்தது சரியான முடிவு என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியாவில் சில வி‌ஷயங்கள் (கொரோனா) மிக விரைவாக அதிகரித்தன. நாங்கள் விளையாடியபோது கொரோனா கட்டுப்பாட்டில் இருந்தோம். அது மிக சிறப்பாக இருந்தது. அந்த கட்டுப்பாட்டில் நாங்கள் நன்றாக கவனிக்கப்பட்டோம். ஆனால் சில மீறல்களும் இருந்தன.

    இதனால் போட்டியை தொடர முடியவில்லை. ஐ.பி.எல். போட்டி தொடரை ஒத்திவைத்தது சரியான முடிவுதான்.

    கொரோனா வைரஸ் விரைவாக அதிகரிப்பதற்கு முன்னதாகவே ஐ.பி.எல். போட்டியில் பெரும் பகுதியில் நாங்கள் கண்காணிக்கப்பட்டு வந்தோம்.

    ஒரு நாடு மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தில் சில மீறல்கள் போன்றவை மிகவும் துன்பகரமான மற்றும் வெளிப்படையான சவாலான நேரங்கள் அவர்களுக்கு விரைவாக ஏற்பட்டு விட்டது.

    எங்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் செல்ல அல்லது நாங்கள் எங்கு செல்ல வேண்டும் என்று நிறைய பேர் அதற்கான பணியில் ஈடுபட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    Next Story
    ×