என் மலர்
செய்திகள்

இங்கிலாந்து கேப்டன் ஜோரூட்டை வீக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் அக்சர் படேல்
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி திணறல் - 39/4
சென்னையில் நடக்கும் 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறி வருகிறது.
சென்னை:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை துவக்கிய இந்திய அணியில் துவக்க வீரர் ரோகித் சர்மா அபாராமாக ஆடினார். ஆனால் மறு முனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன.
சுப்மான் கில், விராட் கோலி ஆகியோர் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். துணை கேப்டன் ரகானே(67 ரன்கள்) ஓரளவு சிறப்பாக ஆடினார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சர்மா 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்து இருந்தது.
2- ஆம் நாள் ஆட்டம் துவங்கியதும் அக்சர் படேல் ஆட்டமிழந்து ஏமாற்றினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தது. எனினும், அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதம் அடித்தார். ஆனால், மறு முனையில் யாரும் நிலைத்து நிற்காததால் இந்திய அணி 95.5 ஓவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 329- ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரிஷப் பண்ட் ஆட்டமிழக்காமல் 58 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்தது. இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. இங்கிலாந்து அணி உணவு இடைவேளை வரை 18 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 39 ரன்கள் எடுத்து தத்தளித்து வருகிறது. இந்திய அணி தரப்பில் அஷ்வின் 2 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா, அக்சர் படேல் தலா 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர். பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
Next Story






