search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கெட் கைப்பற்றியதை கொண்டாடும் சிராஜ்
    X
    விக்கெட் கைப்பற்றியதை கொண்டாடும் சிராஜ்

    பிரிஸ்பேன் டெஸ்ட் மழையால் பாதிப்பு... இரண்டாம் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 243/7

    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று மழை குறுக்கிட்டதால் போட்டி தடைபட்டது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்களும், இந்தியா 336 ரன்களும் சேர்த்தன. இதையடுத்து 33 ரன்கள் முன்னிலையுடன் 2ம் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி, 3ம் நாளான நேற்றைய ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்நிலையில் இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கியது. துவக்க வீரர்களான மார்கஸ் ஹாரிஸ் 38 ரன்களிலும், டேவிட் வார்னர் 48 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். லபுஸ்சாக்னே 25 ரன்கள் சேர்த்தார். அரை சதம் கடந்த ஸ்மித் 55 ரன்களில் ஆட்டமிழந்தார். மேத்யு வேட் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இந்தமூன்று விக்கெட்டுகளையும் சிராஜ் கைப்பற்றினார்.

    அதன்பின்னர் நிதானமாக விளையாடிய கேமரான் கிரீன் (37), டிம் பெய்ன் (27) ஆகியோர் தாகூர் ஓவரில் விக்கெட்டை இழந்தனர். 7 விக்கெட்  இழப்பிற்கு 243 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் முன்கூட்டியே தேநீர் இடைவேளை விடப்பட்டது. 

    மழை தொடர்ந்து பெய்யும்பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி தனது 2ம் இன்னிங்சை முடித்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கோருடன் ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்தால், இந்திய அணியின் வெற்றிக்கு 276 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்படும். இந்த இலக்கை எட்டுவதற்கே இந்தியா கடுமையாக போராட வேண்டியிருக்கும்.
    Next Story
    ×