search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்திரேலியா அணி வீரர்கள்
    X
    ஆஸ்திரேலியா அணி வீரர்கள்

    இந்தியா 336-க்கு ஆல் அவுட்: மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள்

    இந்திய அணிக்கு எதிராக பிரிஸ்பேனில் நடந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.
    பிரிஸ்பேன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் லபுஸ்சேனின் சதத்தின் உதவியுடன் 5 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்திருந்தது.

    இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அறிமுக பவுலர்களான தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முந்தைய நாள் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் பாதியில் வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி நேற்று களம் காணவில்லை.

    பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது புஜாரா 8 ரன்னுடனும், ரஹானே 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் கடைசி பகுதி ஆட்டத்தை ரத்து செய்ய வேண்டியதாகி விட்டது. மழையால் கிட்டத்தட்ட 35 ஓவர்கள் இழப்பு ஏற்பட்டது. இதனால் எஞ்சிய 3 நாள் ஆட்டங்களும் அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் அரை சதத்தை பதிவு செய்தார். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 33 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்கூர் 67 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்களும் எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து தற்போது ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    வார்னர் மற்றும் ஹரிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இதனையடுத்து மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா அணி அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்தனர். வார்னர் 20 ரன்னிலும் ஹரிஸ் 1 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
    Next Story
    ×