search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிவி சிந்து
    X
    பிவி சிந்து

    ஒலிம்பிக்கில் பதக்கம் பெற கடுமையாக உழைக்கிறேன் - பிவி சிந்து

    தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள பிவி சிந்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெற கடுமையாக உழைப்பதாக தெரிவித்துள்ளார்.

    லண்டன்:

    இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. உலக தரவரிசை பட்டியலில் அவர் 7-வது இடத்தில் உள்ளார்.

    ஐதராபாத்தை சேர்ந்த 25 வயதான பி.வி.சிந்து தற்போது இங்கிலாந்தில் தங்கி உள்ளார். இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்காக அவர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    இது தொடர்பாக பி.வி.சிந்து கூறியதாவது:-

    ஒலிம்பிக் போட்டிக்கு நான் நன்றாக திட்டமிட்டுள்ளேன். பதக்கத்தை பெற எல்லோரும் 100 சதவீதம் கடினமான உழைப்பை கொடுக்கவே விரும்புவார்கள்.

    டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதை நான் ஆவலுடன் விரும்புகிறேன். அதற்காக கடுமையாக உழைக்கிறேன். இது எளிதானதல்ல என்று எனக்கு தெரியும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக நடைபெறும் அனைத்து சர்வதேச போட்டிகளிலும் அவர் பங்கேற்கிறார். தாய்லாந்து ஓபன் பேட் மின்டன் போட்டி வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதில் அவர் கலந்து கொள்கிறார்.

    பி.வி.சிந்து 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். அவர் மயிரிழையில் தங்கப் பதக்கத்தை இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கிலாவது தங்கப் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற இலக்கில் உள்ளார்.

    கடந்த ஆண்டு பாசல் நகரில் நடந்த உலக சாம்பியன் போட்டியில் அவர் தங்கப்பதக்கம் பெற்றார். இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவார். ஆசிய விளையாட்டு மற்றும் காமன்வெல்த்தில் அவர் சாதித்து இருந்தார்.

    பி.வி.சிந்து இதுவரை 326 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். 139 போட்டியில் தோற்றுள்ளார்.

    Next Story
    ×