search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியம்சன்
    X
    வில்லியம்சன்

    பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வில்லியம்சன் 23-வது சதம் - நியூசிலாந்து ரன் குவிப்பு

    பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 431 ரன்கள் எடுத்தது.

    மவுண்ட் மவுக்கானு:

    நியூசிலாந்து -பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட் மவுக்கானுவில் நடைபெற்று வருகிறது.

    முதலில் ஆடிய நியூசிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன் எடுத்து இருந்தது. முன்னாள் கேப்டன் டெய்லர் 70 ரன் எடுத்தார். கேப்டன் வில்லியம்சன் 94 ரன்னும், ஹென்றி நிகோலஸ் 42 ரன்னும் எடுத்து களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து ஆடியது. வில்லியம்சன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். 82-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 23-வது செஞ்சுரி ஆகும்.

    மறுமுனையில் இருந்த நிக்கோலஸ் அரை சதத்தை எடுத்தார். அவர் 56 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். அதைத் தொடர்ந்து வில்லியம்சன் 129 ரன் குவித்து வெளியேறினார்.அவரது ஸ்கோரில் 12 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும்.

    பின்னர் வந்த வீரர்களில் வாட்லின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 ரன்கள் எடுத்தார். 155-வது ஓவரில் நியூசிலாந்து அணி 431 ரன்களை குவித்தது. 

    பாகிஸ்தான் தரப்பில் அப்ரிடி 4 விக்கெட்டும் யாசில் ஷா 3 விக்கெட்டும் முகமது அபாஸ், அசரப், நசீம் ஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான மசூத் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜமீசன் ஓவரில் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்து 30 ரன்கள் எடுத்திருந்தது. அபிட் அலி 19 ரன்களுடனும் முகமது அபாஸ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    Next Story
    ×