என் மலர்
செய்திகள்

ஜோ ரூட், விராட் கோலி (கோப்புப்படம்)
சென்னையில் தொடர்ந்து இரண்டு டெஸ்ட்: இங்கிலாந்து தொடருக்கான அட்டவணை வெளியீடு
இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து நான்கு டெஸ்ட், ஐந்து டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடர்களில் விளையாட இரண்டு நாட்டின் கிரிக்கெட் போர்டுகளும் ஒப்புக்கொண்டன.
இந்த நிலையில் இந்தியா - இங்கிலாந்து இடையிலான மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டிகள் அனைத்தும் சென்னை, அகமதாபாத், புனே ஆகிய மூன்று மைதானங்களில் மட்டுமே நடக்கிறது.
முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நடக்கிறது. முதல் டெஸ்ட் சென்னையில் பிப்ரவரி 5-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் 2-வது போட்டியும் சென்னையில்தான் நடக்கிறது. இந்த போட்டி 13-ந்தேதி தொடங்குகிறது.
அதன்பின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானமாக மொதேரா மைதானத்தில் 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இந்த டெஸ்ட் போட்டி பிப்ரவரி 24-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் மார்ச் 4-ந்தேதி 4-வது மற்றும் கடைசி போட்டி இது மைதானத்தில் நடக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 12-ந்தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது. தொடர்ந்து நான்கு போட்டிகளும் இதே மைதானத்தில்தான் நடக்கிறது. 2-வது போட்டி மார்ச் 14, 3-வது போட்டி மார்ச் 16, 4-வது போட்டி மார்ச் 18, ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மார்ச் 20-ந்தேதியும் நடக்கிறது.
அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் புனேயில் மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. 2-வது போட்டி மார்ச் 26-ந்தேதியும், 3-வது போட்டி 28-ந்தேதியும் நடக்கிறது.
Next Story






