என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஹா
    X
    சஹா

    பயிற்சி ஆட்டம்: 2-வது இன்னிங்சில் இந்தியா 189 ரன்னில் சுருண்டது- சகா அரைசதம் அடித்தார்

    பயிற்சி ஆட்டத்தின் 2-வது இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்ப, சகா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடிக்க, போட்டி டிரா ஆனது.
    இந்தியா - ஆஸ்திரேலியா ஏ அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ரகானோ (117 நாட்அவுட்), புஜாரா (54) ஆகியேரின் சிறப்பான ஆட்டத்தால் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. கேமரூன் கிரீன் 125 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்பிற்கு 306 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்து வெளியேறினார். சகா மட்டும் தாக்குப்பிடித்து 54 ரன்கள் அடிக்க, இந்தியா 189 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 131 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஏ களம் இறங்கியது அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருக்கும்போது 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.
    Next Story
    ×