என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ் சுண்டப்பட்டபோது
    X
    டாஸ் சுண்டப்பட்டபோது

    ஆஸ்திரேலியா அணிக்கெதிரான கடைசி டி20 - இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
    சிட்னி:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

    3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் இந்தியா முதல் 2 ஆட்டத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி சிட்னியில் இன்று பிற்பகல் 1.40 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் தற்போது சுண்டப்பட்டது. 

    அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இந்திய அணி விவரம்:- 

    ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாகூர், தீபக் சாஹர், டி.நடராஜன்.

    ஆஸ்திரேலியா அணி விவரம்: 

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மேத்யூ வேட் , டார்சி ஷார்ட், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், ஹென்ரிக்ஸ், டெனியல் சாம்ஸ், சீன் அப்போட், மிட்செல் ஸ்வப்சன், அண்டுரூ டை , ஆடம் ஜம்பா
    Next Story
    ×