search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜடேஜா
    X
    ஜடேஜா

    ஜடேஜாவுக்குப் பதில் பந்து வீசுகிறார் சாஹல்: ஆஸ்திரேலியா பயிற்சியாளர் கடும் அதிருப்தி

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜடேஜாவுக்கு தலையில் அடிபட்டதால் மாற்று வீரராக சாஹல் களம் இறங்கியுள்ளார்.
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி கான்பெர்ராவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் சுழற்பந்து வீச்சு அதிரடி வீரர் ஜடேஜா கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். ஸ்டார்க் வீசிய பந்து ஜடேஜாவின் தலைப்பகுதியில் பலமாக தாக்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த ஜடேஜா 44 ரன்கள் விளாசினார்.

    டாக்டர்கள் பரிசோதித்து அவருக்கு மாற்று வீரர் களம் இறக்கலாம் எனக் கூறினர். இதனால் ஜடேஜாவுக்குப் பதிலாக சாஹல் பந்து வீசுகிறார். ஜடேஜாவுக்குப் பதில் சாஹல் பந்து வீச ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
    Next Story
    ×