என் மலர்tooltip icon

    செய்திகள்

    மார்கன்
    X
    மார்கன்

    60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - கொல்கத்தா வீரர்களுக்கு மார்கன் புகழாரம்

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 60 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் கொல்கத்தா அணி வீரர்களுக்கு அந்த அணியின் கேப்டன் மார்கன் புகழாரம் சூட்டியுள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் 60 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தி வெளியேற்றியது. இந்த வெற்றி மூலம் அந்த அணி பிளேஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. மும்பை-ஐதராபாத் அணிகள் மோதும் ஆட்டத்தின் முடிவை பொறுத்து அந்த அணியின் தலைவிதி இருக்கிறது.

    இந்த வெற்றியால் கொல்கத்தா வீரர்களை கேப்டன் மார்கன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    191 ரன் என்பது நல்ல ஸ்கோர் ஆகும். பேட்ஸ் மேன்கள், பந்து வீச்சாளர்கள் என அனைவரும் சிறப்பாக செயல்பட்டனர். இந்த ஆட்டத்தில் இதற்கு மேல் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என்று கருதவில்லை. இனி என்ன நடப்பது என்பது கடவுள் கையில்தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×