search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி அணியினர்
    X
    டெல்லி அணியினர்

    பெங்களூரை வீழ்த்தி 4-வது வெற்றி - டெல்லி முதல் இடத்துக்கு முன்னேற்றம்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை பதிவு செய்ததன் மூலம் புள்ளி பட்டியலில் டெல்லி அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரை 59 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி 4-வது வெற்றியை பெற்றது.

    துபாயில் நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது.

    ஸ்டோனிஸ் 26 பந்தில் 53 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), பிரித்விஷா 23 பந்தில் 42 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), ரி‌ஷப் பண்ட் 25 பந்தில் 37 ரன்னும் (3 பவுண்டரி,2 சிக்சர் ) எடுத்தனர். முகமது சிராஜ் 2 விக்கெட்டும் , உதனா, மொய்ன் அலி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்னே எடுக்க முடிந்தது இதனால் டெல்லி அணி 59 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் விராட் கோலி அதிகபட்சமாக 39 பந்தில் 43 ரன் (2 பவுண்டரி,1 சிக்சர்) எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். ரபடா 24 ரன் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றி முத்திரை பதித்தார். ஆன்ரிச் நார்ட்ஜே, அக்‌ஷர் பட்டேல் தலா 2 விக்கெட்டும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    டெல்லி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அந்த அணி ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்றுள்ளது. இதன்மூலம் 8 புள்ளிகளைப் பெற்று அந்த அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி ராஜஸ்தானை வீழ்த்தினால் அந்த அணி முதல் இடத்துக்கு வர வாய்ப்புள்ளது.

    பெங்களூர் அணி 2-வது தோல்வியை சந்தித்துள்ளது. அந்த அணி 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி அணி 6-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை வருகிற 9-ந்தேதி சார்ஜாவில் சந்திக்கிறது. பெங்களூர் அணி அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்சை 10-ந்தேதி எதிர்கொள்கிறது.

    Next Story
    ×