search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜடேஜாவின் அற்புதமான கேட்ச்
    X
    ஜடேஜாவின் அற்புதமான கேட்ச்

    எப்படி பிடித்தேன் என்று எனக்கே தெரியவில்லை: ‘ஸ்டன்னிங்’ கேட்ச் பிடித்த ஜடேஜா சொல்கிறார்

    நீல் வாக்னர் அடித்த பந்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகவும் அற்புதமான வகையில் கேட்ச் பிடித்து அசத்தினார் ஜடேஜா.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்யும்போது 9-வது விக்கெட்டுக்கு ஜாமிசன் உடன் நீல் வாக்னர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இதனால் முதல் இன்னிங்சில் முன்னிலை வகிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில்தான் நீல் வாக்னர் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தை டீம் ஸ்கொயர் லெக்கில் தூக்கி அடித்தார். அந்த பந்தை ஜடேஜா சரியான கணித்து ஜம்ப் செய்து ஒரு கையால் அற்புதமாக பிடித்தார். அவர் கேட்ச் பிடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    ரீ-பிளேயில் அவர் அதை அற்புதமாக பிடித்தது தெரியவந்தது. நீல் வாக்னர் கூட ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டு வெளியேறினார். இவரது கேட்ச்சால் கைல் ஜாமிசன் (49)- நீல் வாக்னர் ஜோடி 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

    நான் அந்த கேட்ச்-ஐ பிடிக்கும்போது அதை பிடிப்பேன் என்று நானே எதிர்பார்க்கவில்லை என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.

    ஜடேஜா இதுகுறித்து கூறுகையில் ‘‘நீல் வாக்னர் டீப் ஸ்கொயர் லெக்கில் பந்தை அடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நான் நின்ற இடத்திற்கு வரும் என்று எதிர்பார்க்கவில்லை. காற்று வீசியதால் பந்து வேகமாக வந்தது. நான் கையை நீட்டும்போது அதில் மாட்டிக் கொண்டது. கேட்ச்-ஐ பிடித்த போதிலும், எப்படி பிடித்தேன் என்று நினைத்து பார்க்க முடியவில்லை. நாங்கள் ஒரு குழுவாக சிறப்பாக பந்து வீசினோம்’’ என்றார்.
    Next Story
    ×