என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஷான் பொரேல்
    X
    இஷான் பொரேல்

    ரஞ்சி டிராபி அரையிறுதி: கர்நாடகாவை 122 ரன்னில் சுருட்டியது பெங்கால்

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபியின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்காலின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது.
    ரஞ்சி டிராபி அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் பெங்கால் - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.

    டாஸ் வென்ற கர்நாடகா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பெங்கால் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 67 ரன்னுக்குள் ஆறு விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    அதன்பின் வந்த மஜும்தார் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரின் சதத்தால் பெங்கால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்திருந்தது. மஜும்தார் 120 ரன்களுடனும், இஷான் பொரேல் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. மஜும்தார் தொடர்ந்து ஆட்டத்தை தொடங்கினார். ஆனால் பொரேல் 7 ரன்னில் ஆட்டமிழக்க பெங்கால் 312 ரன்னில் ஆல்அவுட் ஆனது. மஜும்தார் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    கர்நாடகா அணி சார்பில் மிதும், மோர் தலா மூன்று விக்கெட்டுகளும் பிரசித் கிருஷ்ணா மற்றும் கவுதம் தலா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    பின்னர் கர்நாடகா முதல் இன்னிங்சை தொடங்கியது. கேஎல் ராகுல், ஆர் சமர்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சமர்த் ரன்ஏதும் எடுக்காம் டக்அவுட் ஆனார். அதன்பின் வந்த கருண் நாயர் 3 ரன்னிலும், சித்தார்த் 14 ரன்னிலும், மணிஷ் பாண்டே 12 ரன்னிலும் வெளியேறினர். இதற்கிடையே கேஎல் ராகுல் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கடநிலை வீரர்களான கே. கவுதம் 31 ரன்களும், மிதுன் 24 ரன்களும் அடிக்க கர்நாடகா 122 ரன்னில் சுருண்டது. பெங்கால் அணி சார்பில் இஷான் பொரேல் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 190 ரன்கள் முன்னிலையுடன் பெங்கால் 2-வது இன்னிங்சை தொடங்கியது. அந்த அணி 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
    Next Story
    ×