என் மலர்
செய்திகள்

வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் சென்னை அணியினர்
ஐஎஸ்எல் கால்பந்து - அரையிறுதியின் முதல் சுற்றில் கோவா அணியை வீழ்த்தியது சென்னை அணி
சென்னையில் நடந்த ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் அரையிறுதி முதல் சுற்றில் கோவாவுக்கு எதிராக சென்னை அணி 4-1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது.
சென்னை:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதன் லீக் ஆட்டங்கள் முடிந்து, தற்போது அரையிறுதிக்கான ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரையிறுதியில் கோவா, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் தகுதிபெற்றன.
இந்நிலையில், அரையிறுதியின் முதல் சுற்று ஆட்டம் சென்னையில் இன்று இரவு நடைபெற்றது. இதில் சென்னையின் எப்.சி மற்றும் கோவா அணிகள் மோதின.
ஆட்டம் தொடங்கியது முதல் இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதியில் எந்த அணியாலும் கோல் அடிக்கவில்லை.
இரண்டாவது பாதியின் சென்னை அணி வீரர்கள் அதிரடியாக ஆடினர். இதனால் 54, 61, 77, 79 ஆகிய நிமிடங்களில் தலா ஒரு கோல் என மொத்தம் 4 கோல்கள் அடித்தனர். ஆனால், கோவா அணி 85-வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடித்தது.
இறுதியில், சென்னை அணி 4-1 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.
Next Story






