search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவுதம் காம்பிர்
    X
    கவுதம் காம்பிர்

    பிளாட் அல்லது க்ரீன் பிட்ச், எதுவாக இருந்தாலும் இந்தத் திட்டத்துடன் விளையாட வேண்டும்: கவுதம் காம்பிர்

    கிறிஸ்ட்சர்ச் ஆடுகளம் பிளாட்டாக இருந்தாலும் அல்லது க்ரீனாக இருந்தாலும் இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என கவுதம் காம்பிர் வலியுறுத்தியுள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நாளை தொடங்குகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா தொடரை சமன் செய்ய முடியும். மேலும் ஐசிசி-யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 60 புள்ளிகள் கிடைக்கும்.

    இந்தியா வெற்றி பெற வேண்டுமென்றால் பிளாட் பிட்ச் ஆக இருந்தாலும், க்ரீன் பிட்ச் ஆக இருந்தாலும் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என கவுதம் காம்பிர் விராட் கோலிக்கு அறிவுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘இந்தியா ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டும். ஆடுகளம் எப்படி இருந்தாலும் (பிளாட் அல்லது க்ரீன்) விராட் கோலி ஹனுமா விஹாரிக்குப் பதிலாக ஜடேஜாவுடன் களம் இறங்க வேண்டும்.’’ என்றார்.
    Next Story
    ×