search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மிரிதி மந்தனா
    X
    ஸ்மிரிதி மந்தனா

    வீரர்களுக்கு இணையான பணம் கேட்பது நியாயம் கிடையாது: இந்திய கிரிக்கெட் வீராங்கனை சொல்கிறார்

    ஆண்கள் கிரிக்கெட்டில் இருந்துதான் அதிகமான வருமானம் கிடைப்பதால், அவர்களுக்கு இணையாக தொகை கேட்பது நியாயம் அல்ல என ஸ்மிரிதி மந்தனா தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான மத்திய ஒப்பந்த பட்டியலை வெளியிட்டது. இதில் இந்திய வீரர்களில் ஏ பிளஸ் பிரிவில் இடம் பிடித்தவர்களுக்கு 7 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. அதேவேளையில் வீராங்கனைகளுக்கான உயர் பிரிவுக்கு 50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

    இந்த ஏற்றத்தாழ்வு சில வீராங்கனைகளுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கலாம். ஆனால் முன்னணி வீராங்கனையான ஸ்மிரிதி மந்தனா, ஆண்கள் கிரிக்கெட் அதிக அளவில் வருமானம் ஈட்டுகிறது. ஆகவே, அவர்களுக்கு இணையாக பணம் கேட்பது நியாயம் கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில் ‘‘வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் இடையிலான இடைவெளி குறித்து சக வீராங்கனைகள் வருத்தப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால், நாங்கள் இந்திய அணிக்காக வெற்றிகளை தேடிக்கொடுக்க வேண்டும். நன்றாக வளர்ந்து அதன்மூலம் வருமானம் ஈட்ட வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.

    நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். எங்களுக்கு இணையான தொகை தேவை என்பது நியாயம் ஆகாது.’’ என்றார்.
    Next Story
    ×