search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா
    X
    ரோகித் சர்மா

    நியூசிலாந்து கிரிக்கெட் விளையாடுவது எளிதான இடம் அல்ல: ரோகித் சர்மா

    கிரிக்கெட் விளையாட நியூசிலாந்து ஈசியான இடம் கிடையாது, என்றாலும் சவாலை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    ஒயிட் பால் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக திகழும் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டியில் அதிக அளவில் சாதித்ததில்லை. தென்ஆப்பிரிக்கா தொடரின்போது ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். அதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்காளதேச அணிக்கு எதிராகவும் சிறப்பான ஆடினார்.

    இந்தியா தற்போது இலங்கைக்கு எதிராக டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.

    பிப்ரவரி மாதம் நியூசிலாந்து சென்று இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அந்த அணியில் நீல் வாக்னர், மேட் ஹென்ரி, டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இவர்களை எதிர்த்து விளையாடுவது எளிதான காரியம் அல்லை. மேலும், அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இந்திய வீரர்கள் மாறுவது கடினமான ஒன்று.

    இந்நிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் விளையாடுவதற்கு எளிதான இடம் இல்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். ரோகித் சர்மா இதுகுறித்து கூறுகையில் ‘‘கிரிக்கெட் விளையாடுவதற்கு நியூசிலாந்து ஈசியான இடம் கிடையாது. கடந்த முறை நாங்கள் 0-1 என தொடரை இழந்துள்ளோம். ஆனால், சிறந்த முறையில் விளையாடினோம். ஆனால் அப்போதுள்ள பந்து வீச்சை விட தற்போதுள்ள எங்களுடைய பந்து வீச்சு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது’’ என்றார்.
    Next Story
    ×