என் மலர்
செய்திகள்

வங்களா தேச வீரர்கள் - இந்திய வீரர்கள்
இந்தியா - வங்காள தேசம் அணிகள் மோதும் 9-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி
டெல்லியில் நாளை நடக்வுள்ள முதல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியா - வங்காள தேச அணிகளுக்கு 9-வது ஆட்டமாகும்.
இரு அணிகளும் 20 ஓவரில் நாளை மோதுவது 9-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 8 ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக கடந்த மார்ச் மாதம் கொழும்பில் நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்று இருந்தது.
இந்திய அணி அதிக பட்சமாக 180 ரன் குவித்து இருந்தது. வங்காளதேசம் 166 ரன்எடுத்து இருந்தது.
ரோகித்சர்மா 8 ஆட்டத்தில் 356 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். இதில் 4 அரை சதம் அடங்கும் தவான் 236 ரன் எடுத்து உள்ளார். வங்காளதேச வீரர்களில் சபீர் ரகுமான் 236 ரன்னும் (6 ஆட்டம்), முஷ்பிகுர் ரகீம் 165 ரன்னும் எடுத்து உள்ளனர்.
வங்காளதேச வீரர்கள் ரூபல் உசேன், அல்அமின் தலா 7 விக்கெட்டும், அஸ்வின் 6 விக்கெட்டும் கைப்பற்றி உள்ளனர்.
Next Story






