search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சஞ்சு சாம்சன்
    X
    சஞ்சு சாம்சன்

    10 சிக்ஸ், 21 பவுண்டரிகளுடன் இரட்டை சதம் விளாசி சாதனைப் படைத்தார் சஞ்சு சாம்சன்

    உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார்.
    இந்தியாவின் மிகப்பெரிய உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.

    ஆலூரில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் கேரளா - கோவா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற கேரளா பேட்டிங் தேர்வு செய்தது. உத்தப்பா (10), விஷ்ணு வினோத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    உத்தப்பா 10 ரன்னிலும், விஷ்ணு வினோத் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து 3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் - சச்சின் பேபி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி கோவா பந்து வீச்சை துவம்சம் செய்தது. குறிப்பாக சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அவர் 125 பந்தில் இரட்டை சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 129 பந்தில் 21 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசி 212 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சச்சின் பேபி 135 பந்தில் 127 ரன்கள் சேர்த்தார்.

    இருவரின் சதத்தால் கேரளா அணி 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் குவித்தது. இந்த இரட்டை சதம் மூலம் லிஸ்ட் ஏ போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

    அத்துடன் விஜய் ஹசாரே டிராபியில் அதிகபட்ச ஸ்கோர், 3-வது இடத்தில் களம் இறங்கி இரட்டை சதம், முதல் சதத்திலேயே அதிக ரன் என்ற சாதனைகளையும் படைத்துள்ளார்.
    Next Story
    ×