என் மலர்

  செய்திகள்

  உலகக் கோப்பையையும் முத்தமிட விரும்புகிறேன்: ஹர்திக் பாண்டியா
  X

  உலகக் கோப்பையையும் முத்தமிட விரும்புகிறேன்: ஹர்திக் பாண்டியா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றதைபோல், உலகக்கோப்பையிலும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்ற விரும்புகிறேன் என ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
  ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணியில் இடம்பிடித்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

  ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், 402 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 191 ஆகும்.

  ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதுபோல், உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் சீசனில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால், தற்போது இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். ஐபிஎல் கோப்பையை வென்று முத்தமிட்டதுபோல், உலகக்கோப்பையையும் வென்று முத்தமிட விரும்புகிறேன்’’ என்றார்.
  Next Story
  ×