search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிறந்த நாளில் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குதூகலப்படுத்திய அந்த்ரே ரஸல்
    X

    பிறந்த நாளில் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குதூகலப்படுத்திய அந்த்ரே ரஸல்

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக தனது பிறந்த நாள் ஆட்டத்தில் ரசிகர்களுக்கு சிக்சர்கள் மூலம் விருந்து படைத்தார் அந்த்ரே ரஸல் #IPL2019 #KKR #AndreRussell
    ஐபிஎல் தொடரின் 47-வது லீக் ஆட்டம் நேற்றிரவு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில் (76), கிறிஸ் லின் (54) சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். வழக்கமாக 15-வது ஓவருக்குப்பிறகு களம் இறங்கும் அந்த்ரே ரஸல், நேற்று 3-வது வீரராக 10-வது ஓவரிலேயே களம் இறக்கப்பட்டார்.



    நேற்று அவருக்கு பிறந்த நாள். பிறந்த நாள் அன்று ரசிகர்களுக்கு சிக்சர்கள் மூலம் விருந்து படைக்க விரும்பினார். அவரது விருப்பம் வீணாகவில்லை. மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தார். 40 பந்துகளை சந்தித்த ரஸல் 8 சிக்ஸ், 6 பவுண்டரி விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அத்துடன் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இவரது அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 232 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியால் 198 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. கொல்த்தா அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரஸல் பிறந்த நாள் போட்டியில் ஜொலித்ததுடன் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
    Next Story
    ×